Welcome to our Tamil Service
What We Believe
நம் மீட்பர் லூத்தரன் திருச்சபை அன்பானவர்களே
நம் மீட்பர் லுத்தரன் திருச்சபையானது (தமிழ் ஆராதனை), சிங்கப்பூர் லுத்தரன் திருச்சபையின் ஓர் அங்கமாகும். எங்கள் திருச்சபையின் ஆராதனைக்கும், ஆண்டவருக்கு ஊழியம் செய்திடவும் மற்றும் திருச்சபையின் மற்ற ஊழியங்களுக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், அதன் மூலம் நித்திய ஜீவனை அடைந்திடவும், ஆண்டவர் தமது இரக்கத்தையும், அன்பையும் நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் பாவிகளாயிருப்பினும், நமது ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவை மரணம், நமது பாவத்திற்கான கிரையத்தை செலுத்தி இருப்பதினால், நாம் தேவனோடு ஒப்புரவாக்கப் பட்டிருக்கிறோம்.
நாம் அனைவரும் ஆண்டவரோடு ஐக்கியம் கொள்ள, அவரது சாயலாக சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம். இந்த ஐக்கியமே, நம் வாழ்வில் சந்தோஷத்தையும் கொண்டு வருகிறது. இப்படியிருக்க, நம் ஆண்டவருக்கு, நம் ஒவ்வொருவரையும் குறித்த நோக்கம் உண்டு. நாம் அவரிடத்தில் அன்புக் கூறுவதும், அதுப்போல மற்றவர்களிடத்தில் அன்புக் கூறுவதுமே ஆண்டவரின் நோக்கம்.
இப்படியிருக்க, நீங்கள் அனைவருமே சமாதானத்தையும், உங்கள் வாழ்வின் நோக்கத்தையும் அறிவதே எங்களின் விருப்பம். நீங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவை அறிவதும், அவர் அருளும் சமாதானத்தைப் பெறுவதும் மற்றும் உங்கள் வாழ்வின் பயனை அடைவதே, உங்களைக் குறித்த எங்களது பிரார்த்தனையாயிருக்கிறது. எனவே, வாருங்கள்! நாம் ஒன்றாய்க் கூடி ஆராதிப்போம்! மற்றும் ஆண்டவருக்கு ஊழியம் செய்திடுவோம்!
“நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” யோவான் 15:12.
Pastoral Staff
Service Timing ஞாயிறு ஆராதனை நேரங்கள்
Sunday, 6.00 pm - 7.30 pm
Service Timing
ஞாயிறு ஆராதனை நேரங்கள்
ஆராதனை நேரம் இடம்
ஜெபப் புத்தக வழிபாடு காலை 9மணி 3ம் தளம் (ஆங்கிலம்)
துதி ஸ்தோத்திர வழிபாடு காலை 11:15 3ம் தளம் (ஆங்கிலம்)
துதி வழிபாடு (சீனம்) காலை 10:30 1ம் தளம்
முதியோர் உணவு ஐக்கியம் காலை 11 1ம் தளம் (3ம் சனிக் கிழமை)
துதி ஸ்தோத்திர வழிபாடு மாலை 6மணி 3ம் தளம் (தமிழ்)
Children’s Ministry – Sunday School
சிறுவர் ஊழியம்
ஞாயிறு பள்ளியானது 3 வயது முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நடைபெறும். சகோதரி டோரிஸ், சகோ. சார்லஸ், சகோதரி ஜோன், சகோ. ஸ்டான்லி இவ்வூழியத்தை அர்ப்பணிப்போடு செய்து வருகிறார்கள். சிறுவர்களைக் கவரத்தக்க "கதை கேளு , கதை கேளு, பாட்டு பாடு பாப்பா, ஓவியம் வரை வண்ணம் தீட்டு" போன்ற அருமையான நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.
Outreach Ministry - Missions
மேடான் (இந்தோனேஷியா) - சபை மற்றும் சுவிஷேச ஊழியம்
வட இந்தியா மற்றும் தென் இந்தியா - சபை மற்றும் சுவிஷேச ஊழியம்.
Recent Events - Yearly Highlights
More details in our Facebook Page.